சனாதன போர்வையில் குளிர்காய நினைக்கிறார் மோடி; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பிரதமர் மோடி, மக்களை திசைதிருப்பி, சனாதன போர்வையை போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், சனாதனம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் பவன்கெரா காங்கிரஸ் அனைத்து மதங்கள், நம்பிக்கைகளையும் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.